தொழுநோயை கட்டுப்படுத்துவது தொடர்பில் கல்முனையில் செயலமர்வு
கல்முனை பிராந்தியதில் தொழுநோயை கட்டுப்படுத்துவது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் தாதி உத்தியோஸ்தர்களுக்கும் தெளிவு படுத்தும் செயலமர்வு
(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனையில் கல்முனை பிராந்தியத்தில் தொழுநோயை கட்டுப்படுத்துவதற்கான விசேட செயலமர்வு பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த செயலமர்வில் தொழு நோயாளர்களை கண்டறிந்து அவர்களை குணப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதி உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments