உளநல உதவித்திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பொருளாதாதர ரீதியில் இடர்படும் குடும்பங்களுக்கு உதவிகள்
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஒழுங்கமைப்பில் காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன் தலைமையில்
UNICEF & PPCC நிறுவனத்தின் உளநல உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பொருளாதார ரீதியாக இடர்படும் 10 பிள்ளைகளின் குடும்பங்களுக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம அவர்களால் உலர் உணவு பொருட்கள் ,கற்றல் உபகரணங்கள், துவிச்சக்கர வண்டிகள், சிறுவர் கழகங்ளை வலுப்படுத்தும் நோக்குடன் சிறுவர் நூலகங்களுக்குத் தேவையான பொருட்கள் புத்தகங்கள், கதிரைகள் ,மேசைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
No comments