Vettri

Breaking News

கிழக்கு மாகாணத்தின் சிறந்த கிறிக்கட் அணியாக கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி தெரிவு!!





(அஸ்ஹர் இப்றாஹிம்)


இலங்கை பாடசாலைகள் கிறிக்கட் சம்மேளனம்  ஸ்ரீலங்கா கிறிக்கட் நிறுவனத்துடன்  இணைந்து ஒழுங்கு செய்திருந்த இலங்கையில் கிறிக்கட் துறையில் பிரகாசிக்கும் பாடசாலைகளை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு கடந்த வியாளக்கிழமை (26) கொழும்பு,பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் 19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான சிறந்த கிறிக்கட் அணி விருது கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி அணிக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதன்போது கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர், கிறிக்கட் பயிற்றுவிப்பாளர் ஏ.எம்.அப்ராஜ் றிலா, விளையாட்டு பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம்.அமீர், கிறிக்கட் அணி மாணவ  பிரதிநிதிகள் ஆகியோர்    கலந்து கொண்டு மேற்படி விருதினை பெற்றுக் கொண்டனர்.

No comments