Vettri

Breaking News

மோட்டார் சைக்கிள் - வேன் மோதி விபத்து..கணவன் மனைவி உயிரிழப்பு.




(அஸ்ஹர் இப்றாஹிம்)

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தம்பதியர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 38 வயதுடைய கணவனும்  அவரது 32 வயது மனைவியும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments