பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் - சி.வி விக்னேஸ்வரன் தெரிவிப்பு!!
இளையோருக்கு இடமளித்து இம்முறை தேர்தலில் போட்டியிட போவதில்லைனெவும் எனினும் தனது அரசியல் பணி தொடருமெனவும் ஆனால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் தமிழ்த் தேசியத்தை சிதைய விடாது பாதுகாத்துக் கொண்டு தமிழ் மக்களிற்குரிய உரித்துக்களை வென்றெடுப்பதே ஆகும்.
இதன்பொருட்டு அரசியல் அனுபவங்கள் உள்ளவர்களையும் இளைஞர்களையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களுக்கான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியில் உள்ள இளைஞர்களுக்கு வழிவிட்டு அரசியலில் முதிர்ச்சி உள்ளவர்கள் அவர்களுக்கு பக்கபலமாக நின்று வழிகாட்ட வேண்டும் என்பது தனது விருப்பமென அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு அரசியலில் இடம் வழங்குவதற்கு முன்மாதிரியாக இருக்கும் வகையில் தமிழ் மக்கள் கூட்டணியின் பணிகளை முன்னெடுக்கும் அதேநேரம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடாது, இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
No comments