தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்கள் மத்தியில் ஒவ்வொரு தேர்தலிலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்- பிரசாந்தன் தெரிவிப்பு!!
இத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கரத்தினை பலப்படுத்துவதன் ஊடாக தான் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பினை பலப்படுத்த முடியும்.குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பினை உறுதிப்படுத்த முடியும்.ஏனெனில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் புரட்சி காரணமாக மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது.எதிர் வருகின்ற 5 வருடங்கள் தமிழர்களை பொறுத்த வரை முக்கியமானதாகும்.இந்த சூழலில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கின்ற காலகட்டம்.கண்கெட்ட பிற்பாடு சூரிய நமஸ்காரம் செய்ய முடியாது.ஆகவே மக்கள் தீர்க்கமான முடிவுகளை எடுப்பார்கள்.தமிழரசுக்கட்சி உட்பட இதர கட்சிகளை மக்கள் ஏற்கனவே தூக்கி எறிந்திருக்கின்றார்கள்.
மேற்குறித்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதிச்செயலாளர் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் யோகராஜா சந்திரகுமார் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்
No comments