இளம் தம்பதிகளிடமிருந்து "ஆற்றலுள்ள பிள்ளைகளை உருவாக்குதல்" தொடர்பான முன்மாதிரி கருத்தரங்கு
(அஸ்ஹர் இப்றாஹிம்)
அட்டாளைச் சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் உள்ள பாலமுனை, ஒலுவில் மற்றும் அட்டாளைச்சேனையில் உள்ள இளம் தம்பதிகளுக்கான, குறிப்பாக கர்ப்பினி தாய்மார்கள் மற்றும் அவர்களின் கணவன்மார்களுக்கான "வளமான பெற்றோர்களிடமிருந்து - ஆற்றலுள்ள பிள்ளைகளை உருவாக்குதல்" எனும் தொணிப்பொருளில் மாபெரும் முன்மாதிரி நிகழ்வ கடந்த சனிக்கிழமை(14) அட்டாளைச்சேனை சகி மண்டபத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் . ஏ.எம்.எம். இஸ்ஸடீன் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள், அட்டாளைச்சேன சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள வைத்திய சாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், வைத்தியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள், பிரிவுகளில் இயங்கும் தாய்மார் உதவிக் குழுக்களின் தலைவர்கள், செயலாளர்கள், ஆலோசகர்கள், சமூக மட்ட பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான இளம் தம்பதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாகவும், டொக்டர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன், டொக்டர் எம்.எச்.றிஸ்வின், டொக்டர் எம்.ஜே.நெளபல் ஆகியோர் வளவாளர்களாகவும் கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்தினர்
முன்மாதிரி மிக்க இந்த செயற்பாட்டிற்காக இளம் தம்பதிகள் உட்பட அனைவரும் பாராட்டி நன்றிகள் தெரிவித்தனர்
No comments