அம்பாறை மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களில் இரவில் காட்டு யானைகளும்,பகலில் குரங்குகளின் தொல்லையும் அதிகரித்துள்ளதால் பிரதேசவாசிகளின் அன்றாட வாழ்க்கை சீரழிந்துள்ளதாக மக்கள் விஷனம்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)
அம்பாறை மாவட்டத்திலுள்ள மகா ஓயா, பதியத்தலாவ, தெஹியத்தக்கண்டிய மற்றும் நாமல்ஓயா பிரதேசங்களில் இரவில் காட்டு யானைகளின் தொல்லை முன்னரை விட அதிகரித்துக் காணப்படுவதால் உயிர்கள் காவு கொள்ளப்படுவதுடன், குடியிருப்புகளுக்கும், உடமைகளுக்கும், பயிர்களுக்கும் பலத்த சேதத்தை உண்டு பண்ணுகின்றன.
பகலில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் வீடுகளில் காணப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பாடசாலைக்கு பிள்ளைகள் கொண்டு செல்லும் உணவுப் பொருட்களையும் குரங்குகள் பலவந்தமாக பறித்துச் செல்வதால் மாணவர்கள் பாடசாலைக்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்வதில் பலவிதமான சிக்கல்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
பயிர் செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராகவுள்ள அனேகமான பழமரங்களையும் பழங்களையும் குரங்குகள் உண்டு சேதப்படுத்துவதால் பொருளாதார ரீதியில் பலவழிகளிலும் நஷ்டமடைந்து வருவதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
No comments