கிழக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக வீதியில் இறங்கியுள்ள அரசியல்வாதிகள்
கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் திகாமடுல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வெற்றிக்காக வீதியில் இறங்கி பிரச்சாரம்
(அஸ்ஹர் இப்றாஹிம்)
பாராளுமன்ற தேர்தலில் கூட தமக்கு ஆதரவு தேடி வீதிக்கு இறங்காத கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வெற்றிக்காக வீதி வீதியாக ,வீடு வீடாக , கடை கடையாக இறங்கி ஆதரவு திரட்டி வருகின்றனர்.
எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் சகல தேர்தல் பிரச்சாரங்களையும் நிறுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளதை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments