காத்தான்குடி குபா விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம்
(அஸ்ஹர் இப்றாஹிம்)
காத்தான்குடி குபா விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் காத்தான்குடி அல் ஹிறா மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு வழங்கும் பொருட்டு இந்த இரத்ததான முகாம் இடம்பெற்றது
காத்தான்குடி குபா விளையாட்டுக் கழகத்தின் சமூக சேவை பணிகளில் ஒன்றாக இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
குபா விளையாட்டு கழகத்தின் தலைவர் சுஜாத் அஹமத் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இரத்த வங்கி வைத்திய அதிகாரி மற்றும் அதன் தாரியர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்
இந் இரத்ததானமுகாமில் இளைஞர் யுவதிகள் பொதுமக்கள் விளையாட்டுக்கழக வீரர்கள் என பலரும் இரத்த தானம் செய்தனர்
No comments