Vettri

Breaking News

ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர் கல்லூரி மாணவி சஹானா குண்டு போடுதல் நிகழ்வில் புதிய கிழக்கு மாகாண சாதனை







(அஸ்ஹர் இப்றாஹிம்)

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர் கல்லூரி  மாணவிகள் 16 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான குண்டு போடுதல் நிகழ்வில் முதலிரண்டு இடங்களைப்பெற்று சாதனை படைத்துள்ளதுடன் தேசிய மட்ட போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர் கல்லூரி மாணவி ஆர்.எப்.சஜானா மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற  16 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான குண்டு போடுதல் நிகழ்வில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தின் சுவீகரித்துள்ளதுடன் 9.7 மீற்றர் தூரம் குண்டு போட்டு புதிய மாகாண சாதனையையும் நிலைநாட்டியுள்ளார். 

அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவி எப்.பாத்திமா சஜா அதே வயதுப் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

No comments