கல்முனை மாநகரில் மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு மீலாத் கொடியேற்ற ஊர்வலம் இடம்பெற்றது.
(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் பரிபாலன சபை ஏற்பாடு செய்திருந்த மீலாத் கொடியேற்ற ஊர்வலம் அண்மையில் இடம்பெற்றது.
ஹிஜ்ரி 1446/2024 மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு றபீஉனில் அவ்வல் மாத ஆரம்ப நிகழ்வாக கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் இருந்து முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நோக்கி மீலாத் கொடியேற்ற ஊர்வலம் சென்றடைந்தது.
No comments