Vettri

Breaking News

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த கனரக வாகனம்!!





(அஸ்ஹர் இப்றாஹிம்)

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவைக்கும் பத்தேகமவுக்கும் இடையில் (19) வியாழன் காலை கொள்கலன் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கொள்கலன் வாகனத்தின் பின்பகுதியில் இரண்டு டயர்கள் வெடித்ததன் காரணமாக சாரதியால் வாகனத்தை  கட்டுப்படுத்த முடியாமல் கொள்கலன் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து கொழும்பு நோக்கிச் செல்லும் இரண்டு பாதைகளில் ஒரு பாதை தடைப்பட்டுள்ள போதிலும், மற்றைய பாதையில் வாகனப் போக்குவரத்து வழமையாக இடம்பெறுவதாக அறிவிக்கப்படுகிறது.

No comments