சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஜயம் செய்து அபிவிருத்தி பணிகளை மேற்பார்வையிட்டார்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீன் (09) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
PSSP திட்டத்தின் கீழ் சுமார் 22 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வைத்தியர்களுக்கான விடுதிக் கட்டிடத்தினையும் இதன்போது பார்வையிட்ட பிராந்திய பணிப்பாளர் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறும் சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ரீ.பிரபாசங்கரை சந்தித்து கலந்துரையாடிய பணிப்பாளர் வைத்தியசாலையின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் அவர்களும் கலந்துகொண்டார்.
கல்முனை பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து வரும் பிராந்திய பணிப்பாளர் குறித்த வைத்தியசாலை மற்றும் சுகாதார நிறுவனங்களின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments