கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் க.பொ.த.சாதாரண தர மாணவர்களின் ஒன்றுகூடலும் பரிசளிப்பு விழாவும்
(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இவ்வருடம் க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி பரீட்சை பெறுபேறுகளை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களின் ஒன்றுகூடலும்,பாடவிதான மற்றும இணைப்பாடவிதான செயற்பாடுகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் கல்லூரி கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் கூட்ட மண்டத்தில் இடம்பெற்றது.
பகுதித் தலைவர் ரீ.கே.எம்.சாகிரின் நெறிப்படுத்தலில் கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் பிரதம அதிதியாகவும்,கல்முனை வலய பிரதி கல்விப்பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர் மற்றும் சாய்ந்தமருது கோட்ட கல்விப் பணிப்பாளர் அஸ்மா அப்துல் மலீக் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும்,சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை சிரேஸ்ட வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.கே.சனூஸ் காரியப்டர் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
மாணவர்களினால் மேடையேற்றப்பட்ட கலை கலாச்சார நிகழ்வுகள் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்
No comments