ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பு செய்வதற்காக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சிந்தக்க அபேவிக்ரம இன்று (21) சனிக்கிழமை காலை அக்கரைப்பற்று பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக். ரீ.எம்.எம்.அன்ஸார், உதவி பிரதேச செயலாளர் அஷ்ஷேக். றாசீத் யஹ்யா, கிராம நிலதாரி எம்.உபைத் ஆகியோருடன் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டதோடு, இப்பிராந்தியத்தில் வாக்களிப்பு மிகவும் சுமுகமாக நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளையும் பாதுகாப்பு தரப்போடு இணைந்து செயற்படுத்தியுள்ளதாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெளிவுபடுத்தினார்.
No comments