கோமாரி செல்வபுரமக்களுக்கு மிக விரைவில் குடிநீர் இணைப்பு-சட்டத்தரணியும் மான திரு.ஜெகசுதன் தெரிவிப்பு!!
மதிப்பிற்குரிய சட்டத்தரணியும் சமுக செயற்பாட்டாளருமான கு.ஜெகசுதன் ஜயா அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொத்துவில் பிரதேச கோமாரி செல்வபுரத்தில் வாழும் மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் தேவையினை முதல் கட்டமாக பூர்த்தி செய்து வைத்தார்.
அதன் பின்பு அவர்களுக்கு நிரத்தரமான குடிநீர்வசதினை பெற்றுக்கொடுப்பதற்கான பலதரப்பட்ட முயற்சி களை செய்து வந்த நிலையில் விரைவில் அவர்களுக்கான நிரந்தர குடிநீர் வசதி மிக விரைவில் வழங்கப்படவுள்ளதாக இன்றைய தினம் தெரிவித்தார்....
அது போன்று திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காயத்திரி கிராமத்திலும் குடிநீர் பிரச்சினைக்கு முககொடுத்து வரும் மக்களுக்காக நிரந்த குடிநீரினை வழங்குவதற்கான அவரின் முதல் கட்ட முயற்சியினை இன்றைய தினம் உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்....
விரைவில் இரு பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் காணப்படும் முக்கிய தேவையான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்......
மேலும் அவர் தெரிவிக்கையில் தற்போது தற்காலிக தீர்வு கிடைக்கபெற்றுள்ளது விரைவில் நிரந்த தீர்வு கிடைக்கபெறும் என அவர் தெரிவித்துள்ளதுடன் மேலும் இவ்வாறான சமுக பணிகள் அரசியல் சார்ந்து அல்ல எனவும் சமுக சேவை மக்களுக்கான பணி எனது உயிர் மூச்சி எனவும் அவர் தெரிவித்தார்....
No comments