Vettri

Breaking News

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி ஸமா கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் பரிதி வட்டம் வீசி தங்கம் வென்றார்







(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி  ஆர்.எப்.ஸமா  பரிதிவட்டம் வீசுதல் நிகழ்ச்சியில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தேரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தங்கம் வென்று சாதனை நிலைநாட்டினார்.

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் (07) நடைபெற்ற போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இம்மாணவி மற்றும்  பயிற்றுவிப்பாளர்கள் அனைவருக்கும் பாடசாலை கல்வி சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.

No comments