கிழக்குமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மேசைப்பந்தாட்டப் போட்டிகள் திருகோணமலையில் இடம்பெற்ற போது மட்டக்களப்பு முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய மேசைப்பந்தாட்ட 18 வயதிற்குற்பட்ட. ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளும்,16 வயதிற்குட்பட்ட பெண்கள் அணியும் முதலிடம் பெற்று சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இப்போட்டியில் 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணி மூன்றாமிடத்தையும் 20 வயதுக்குட்பட்டோருக்கான தனிப்பட்ட வீராங்கனைகளுக்கான போட்டியில் இப் பாடசாலை மாணவி எம்.நிவேதிதா சம்பியனானதுடன் 20 வயதுக்குட்பட்டோருக்கான தனிப்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் கே.சுஜிரன் இரண்டாமிடத்தையும் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கும் முனைக்காடு விவேகானந்த மகாவித்தியாலயத்திற்கும் முனைக்காடு கிராமத்திற்கும் பெருமையினை தேடிக்கொடுத்திருக்கின்றனர்.
No comments