தம்பகாமம் கலைமகள் முன்பள்ளி மழலைகள் விளையாட்டு விழா!
(அஸ்ஹர் இப்றாஹிம்)
பச்சிலைப்பள்ளி பிரதேச தம்பகாமம் கலைமகள் முன்பள்ளி மழலைகள் விளையாட்டு விழா சிறப்புற நடைபெற்றது.
கலைமகள் முன்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன் அவர்களும், சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி வடக்கு வலயக்கல்வி அலுவலகத்தின் ஆரம்ப முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவின் உதவிக்கல்விப் பணிப்பாளர் பொ.விஜயநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, மங்கல விளக்கேற்றல், கொடி ஏற்றல், இறைவணக்கம், வரவேற்புரை, ஆசியுரை, ஒலிம்பிக் தீபம் ஏற்றல், சத்தியப் பிரமானம் செய்தல் முதலான நிகழ்வுகளை தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மேலும், பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளைத் தொடர்ந்து இடைவேளை இசையும் அசைவும் நிகழ்வு, பழைய மாணவர் நிகழ்வு, உத்தியோகத்தர் நிகழ்வு, பெற்றோர் நிகழ்வு, விருந்தினர் உரை, பரிசில் வழங்கல் முதலான நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வின் இறுதியில் பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் தம்பகாமம் கிராம சேவகர் பிரிவின் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments