சாய்ந்தமருது நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் "சுத்தமாக இருப்போம் ; பசுமையோடு வாழ்வோம் " எனும் தொனிப்பொருளின் கீழ் மாதம் ஒரு பாடசாலையின் சுற்றுப்புற சூழலினை சுத்தமாக வைத்திருக்கும் பணியின் முதற்கட்டம் சாய்ந்தமருது றியாலுல் ஜன்னாஹ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
குறிப்பாக மாணவர்களுக்கு தொற்று நோய்களை உருவாக்கும் அழுக்குகள், குப்பைகள் அற்ற ஒரு புது யுகத்தை உருவாக்கும் முகமாக பாடசாலை சூழலிலுள்ள கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டு சுத்தமாக்கும் சிரமதான பணி இதன்போது மேற்கொள்ளப்பட்டது.
இந் நிகழ்வில் சாய்ந்தமருது சமூக சேவை உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவை பணிப்பாளர், அமைப்பின் ஆலோசகர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
No comments