ஹற்றன் ,ஸ்ரீபாத தேசிய கல்வியல் கல்லூரி கட்டுறுப்பயிலுனர் சசிகுமார் லேணுகா தொகுத்த "சிறுகற்கள் " தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியில் கட்டுறுப்பயில்வுக்காக இணைக்கப்பட்டுள்ள ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் முதலாம்மொழி தமிழ் கற்கை நெறியைச் சார்ந்த ஆசிரிய மாணவி செல்வி சசிகுமார் லேணுகா தனது கட்டுறுப் பயில்வுகால தனியாள் செயற்றிட்டங்களுள் ஒன்றாக குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளின் கவிதைகள்,கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் உள்ளடங்கிய இருபத்தொரு ஆக்கங்களைக் கொண்ட "சிறுகற்கள்" எனும் தலைப்பில் அமைந்த தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் உபபீடாதிபதி பரசுராம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
குறித்த பாடசாலை அதிபர் திரு. தி.நாகராஜ் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கதிரேசன் மாதிரி ஆரம்பப் பாடசாலை அதிபர் திரு.பெ.லோகேஸ்வரன் மற்றும் உணுகொட்டுவ தமிழ் வித்தியாலய அதிபர் திரு.அ.லெட்சுமணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.
No comments