சம்மாந்துறை மின்மினி மின்ஹா அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தவினால் கௌரவிப்பு
பாறுக் ஷிஹான்
இலங்கை தீவு முழுவதும் பசுமையை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு மில்லியன் நபர்களுக்கு காலநிலை மாற்றம் தொடர்பாகவும் பிலாஸ்டிக் - பொலித்தீன் பாவனை எதிர்ப்பு தொடர்பாகவும் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நாடு முழுவதும் நடுவது தொடர்பாகவும் இற்றைக்கு மூன்று வருடங்களாக சுய முயற்சியாக இச் செயற்பாட்டை மேற்கொண்டு வரும் சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் மின்மினி மின்ஹாவுக்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தும் மற்றும் தனது 30 வருட பாராளுமன்ற அரசியல் வாழ்வு தொடர்பில் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு செவ்வாய்க்கிழமை(17) காரைதீவு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது குறித்த மாணவி மேடைக்கு அழைக்கப்பட்டு ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நாடு முழுவதும் நடுவது தொடர்பான செயற்திட்டம் குறித்து கேட்கப்பட்டதுடன் அமைச்சரினால் அம்மாணவி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments