Vettri

Breaking News

நாட்டில் இனவாதமற்ற அரசாங்கத்தை உருவாக்குவோம். சம்மாந்துறையில் தேசய ஐக்கிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க





(அஸ்ஹர் இப்றாஹிம்)


இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் தமது தாய்மொழியில் அரசாங்கத்துடன் கொடுக்கல், வாங்கல் செய்ய முடியுமான அரசாங்கத்தை உருவாக்குவோம். என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.


“வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்  சம்மாந்துறையில் (13)  தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறைத் தொகுதியின் அமைப்பாளர் ஏ.எஸ்.எம். புஹாரி தலைமையில்  இடம்பெற்றது. 

அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே –இன்று எமக்கு எவ்வாறான அரசாங்கம் தேவைப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட அனைத்து பகுதி மக்களினதும் வெற்றெடுத்த மக்களது அரசாங்கமே  தேவைப்படுகின்றது. அதற்கு அனைத்து இன மக்களின் ஆதரவைப் பெற்ற அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.
நீங்கள் எங்கம் மீது வைத்துள்ள நம்பிக்கை காரணமாக  ஒன்றுகூடியுள்ளீர்கள். அந்த நம்பிக்கை சீர்குலைப்பதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். எமது வெற்றி உறுதியானது  எதிர் தரப்பினர் பல்வேறு பொய்யான விடயங்களை கூறிவருகின்றனர்.
எமது ஆட்சியில் முஸ்லிம்களின் றமழான் பண்டிகை மற்றும் ஹஜ் பண்டிகை என்ற ஒன்றை கொண்டாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவோம். என அண்மையில் நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா கூறியிருந்தார். அதுமட்டுமன்றி ஐவேளைத் தொழுகைக்கும் சந்தர்ப்பம் வழங்க மாட்டோம் என  போலிச் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தனர்.
இவ்வாறு மக்களை ஏமாற்றுவதற்கு பொய்களை கூறிவருகின்றனர். அவ்வாறே சிங்கள மக்கள் மத்தியிலும் வேறு வகையான பொய்களை கூறிவருகின்றனர். இவ்வாறான கொய்களை மக்கள் நம்ப வேண்டாம்.
இந்நாட்டில் தமிழ், சிங்கள மொழிகளை பேசுகின்ற மக்கள் வாழ்கின்றனர். தமிழ் மக்களுக்கென்று தனித்துவமான கலாசாரம் காணப்படுகின்றது. அதேபோல் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கென்றும் தனித்தவமான கலாசாரம் காணப்படுகின்றது. 
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனைத்து இன மக்களின் மதங்களையும் மதிப்பளிக்கும் அரசாங்கத்தை உருவாக்குவோம். தமது தாய்மொழியில் கொடுக்கல் வாங்கல் செய்ய முடியுமான அரசாங்கமாக இருக்கும். அனைவருக்கும் சமமான உரிமை கிடைக்கும். 
உண்மையில் இனவாதிகள் யார்? 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார். அவர் எவ்வாறு மீண்டும் ஏழுந்தார். கொத்துரொட்டியில் கருத்தடை மாத்திரை உள்ளதா கூறினர். அதேபோன்று முஸ்லிம்களின் கடைகளில் விற்கப்படும் ஆடைகளில் பெண்களுக்கு கருத்தடை ஏற்படும். என பிரசாரம் செய்தனர். அதன்பின்னர் அதனைவிட சற்று ஏழுந்து நின்றனர். கருத்தடையை ஏற்படுத்தும் வைத்தியர்கள் உள்ளார்கள். என்று பின்னர் கூறினர். அதனை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ நேராக எழுந்து நின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற பின்னர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார். தோல்வி அடைந்த ராஜபக்ஷவினர் இவ்வாறு வெற்றி பெற்றனர். 
இவ்வாறு இனவாதம் மூலமே வெற்றிபெற்றனர். வாடிய தாமரைமொட்டு எவ்வாறு மலர்ந்தது. அனவாதம் மூலமே தாமரை மொட்டு மீண்டும் மலர்ந்தது தற்போது தாமரை மொட்டின் உறுப்பினர்கள் எங்குள்ளனர். ஓரு தரப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடமும், மற்றுமொரு தரப்பினர் சஜித் பிரேமதாசவிடமும் உள்ளனர்.
கொவிற் தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள்  உலக நாடுகள் நல்லடக்கம், தகனம் இவை இரண்டையும் அனுமதி வழங்கிய போது அமைச்சரவை நல்லடக்கம் செய்ய முடியாது. என முடிவு எடுத்தது. அன்றே இவ்வாறு இனவாதத்தை தூண்டிவர்களின் தலைவராக ரணில் விக்கிரசிங்கவிடம் உள்ளனர். இவ்வாறு இனவாதத்தை தூண்டியவர்களும் சஜித் பிரேமதாசவின் பக்கமும் உள்ளனர்.  
எனவே, இனவாதத்திற்கு ஒருபோதும் துணை போகாத கட்சி தேசிய மக்கள் சக்தியாகும். இத்தேர்தலில் எம்மை வெற்றிபெறச் செய்து இனவாதம், மதவாதம் இல்லாத அரசாங்கத்தை அமைத்து 21ற்கு பின்னர் நாட்டில் புதுயுகத்தை உருவாக்குவோம். அதற்கு அனைத்து மக்களும் எம்மோடு கைகோர்க்க வேண்டும்.
என்றார்.அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து 

No comments