Vettri

Breaking News

கிழக்கில் இனவாத ரீதியிலான கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து எதிர்காலத்தில் முஸ்லீம் மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் -ஐக்கிய முன்னணி செயற்பாட்டாளர் ஏ.ஆதம்பாவா!!




(அஸ்ஹர்  இப்றாஹிம்)

முஸ்லிம் கட்சித் தலைவர்களால் இனவாத ரீதியில் மூளைச்சலவை செய்யப்பட்ட முஸ்லீம் மக்கள் எதிர்காலத்தில் இன ரீதியாக சிந்திக்காமல் எல்லோரும் இலங்கையர் எனும் ரீதியில் இவர்களை புறக்கணித்து தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும்.


இவ்வாறு அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த சகல இன மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதற்காக  சாய்ந்தமருது பிரதேச வாக்காளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த கல்முனை தொகுதிக்கன தேசிய ஐக்கிய முன்னணியின்  ஏற்பாட்டளார் ஏ.ஆதம்பாவா மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களின் போது மேடைகளில் இல்லாத பொல்லா பொய்களையும் கட்டுக்கதைகளையும் கட்டவிழ்த்து முஸ்லிம் மக்களின் வாக்குகளை கொள்ளையடித்து அதன் மூலம் தமது அரசியல் வாழ்க்கையை தொடரவிருந்த இன ரீதியிலான கட்சி தலைவர்களுக்கும்  அவர்கள் பின்னால் சென்ற அரசியல் வாதிகளுக்கும் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் சவாலாக பெரும் அமைந்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களின் போது இன ரீதியாக செயற்படும் கட்சிகளுக்கும் அதன் அருவடிகளுக்கும், கூஜாத் தூக்கிகளுக்கும்,தரகர்களுக்கும் முஸ்லிம் மக்கள் விடை கொடுத்து தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும்.

தற்போதய ஜனாதிபதி கெளரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்த நாட்டில் சகல இன மக்களையும் ஒன்றிணைத்து வளமான ஸ்ரீலங்காவை முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ளார். 

கிழக்கு மாகாண முஸ்லீம்கள் இனிமேலும் பொய்யர்கள் பின்னால் செல்லுவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

தேர்தல் காலங்களில் பிரச்சார மேடைகளில் முஸ்லிம்  மக்கள் மத்தியில் நாடகமாடி, பித்தலாட்டம் பண்ணி, பிரதேசத்திற்கு பிரதேசம் கிண்டலான கட்டுக்கதைகளைக் கூறி ,பிரதேசவாதத்தை தூண்டி மக்களுக்கிடையில் பிரிவினவதத்தை தூண்டிய இந்த இனவாத கூம்பலை மீண்டும் தோல்வியடைய செய்து தொடர்ச்சியான அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

No comments