கல்முனையில் பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் சுகாதார விழிப்புணர்வு செயலமர்வு
கல்முனை பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான பாலியல் சுகாதார விழிப்புணர்வு செயலமர்வு
(அஸ்ஹர் இப்றாஹிம்)
ஆலையடிவேம்பு, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட கோளாவில், விநாயகர் மகா வித்தியாலயத்தில் க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கு, "இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களுக்கான பாலியல் ஆரோக்கியம் மற்றும் சவால்கள்" எனும் தலைப்பிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புத் திட்டத்தின் பொறுப்பு வைத்தியர், வைத்தியக் கலாநிதி ஐ.எல்.ஜலால்தீன் அவர்களின் தலைமையிலும் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பூரண பங்களிப்புடனும் இந் நிகழ்வு இடம்பெற்றது.
No comments