ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கண்காணிப்பு கள விஜயமும் உபகரணங்கள் வழங்கி வைப்பும்!!!
(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு விஜயம் செய்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் குறித்த போட்டோ கொப்பி இயந்திரத்தினை சுகாதார வைத்திய அதிகாரியிடம் கையளித்தார்.
பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன்போது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி ஏ.அகிலன் பிராந்திய பணிப்பாளரின் சேவையினைப் பாராட்டி பொண்ணாடை போர்த்தி கௌரவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களின் அத்தியாவசியத் தேவைகளை நிவர்த்தி செய்து பொதுமக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கும் பொருட்டு பிராந்திய பணிப்பாளர் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
அந்தவகையில் பிராந்தியத்தில் உள்ள சுகாதார நிறுவனங்களுக்கு கள விஜயங்களை மேற்கொண்டுவரும் பணிப்பாளர், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுக்களையும் சந்தித்து வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடி வருகிறார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் அண்மையில் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு மின்பிறப்பாக்கி (Generator) மற்றும் தளபாடங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments