மட்டக்களப்பில் உளநல பிரச்சனைகளை அடையாளம் காணும் நுட்பங்களைபற்றி வைத்தியர்களுக்கு தெளிவூட்டல்!!!
செ.துஜியந்தன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையங்கள் உட்பட அனைத்து வைத்திய சாலைகளிலும் உளநல பதிப்புக்களை அடையாளம் காணல் மூலம் சரியான நேரத்தில் அதற்கான சிகிச்சைகளுக்கான வழிகாட்டுதல்களை நெறிப்படுத்தும் பயிற்சி பட்டறையென்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றிருந்தது.
தற்கொலை எண்ணம் உட்பட, உளநல பிரச்சனையின் அபாயங்களை அடையாளம் காணுதல் மற்றும் அவற்றிக்குரிய தகுந்த வழிகாட்டுதலை மேற்கொள்ளல் பேன்றவற்றை பற்றிய மேலதிக நுட்பங்களை முதுநிலை மனோநல மருத்துவ நிபுணர் டாக்டர் எம். கணேசன் வளவாளராக கலந்துகொண்டு வைத்திய அதிகாரிகளுக்கு தெளிவுட்டியிருந்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் ஸ வழிகாட்டுதல்களோடு மாவட்ட உளநல பிரிவினரது பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர். டான் சௌந்தரராஜா ஒருங்கிணைத்த இப் பயிற்சியானது சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments