கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் களை கட்டிய தேசிய ஐக்கிய முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டங்கள்
(அஸ்ஹர் இப்றாஹிம்)
தேசிய ஐக்கிய முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டங்கள் கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது மருதூர் சதுக்கத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
கல்முனைத் தொகுதிக்கான அமைப்பாளர் ஆசிரியர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற மேற்படி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க கலந்து கொண்டு உரையாற்றினார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று ,ஒலுவில்,நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களிலும் வெள்ளிக் கிழமை மாலை பல தேர்தல் பிரச்சார கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
அதிகளவிலான பெண்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Npp மக்கள் சக்தி
ReplyDelete