காரைதீவு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக விசேட கலந்துரையாடல்
(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினரை
சந்தித்து அவ் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினார்.
வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தற்போதுள்ள தேவைகள் மற்றும் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்ட பிராந்திய பணிப்பாளர் அபிவிருத்திக் குழுவினால் முன்வைக்கப்பட்ட தேவைகளில் அத்தியாவசியமானவற்றை உடனடியாக நிவர்த்தி செய்வதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்டவர்களை பணித்துள்ளார்.
சுகாதார மேம்பாடு மற்றும் வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுக்களை சந்தித்து கலந்துரையாடி வருவதாகவும் இதுபோன்ற கலந்துரையாடல்களை எதிர்காலத்திலும் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் பிராந்திய பணிப்பாளர் இதன்போது குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலின் போது பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிரும் கலந்துகொண்டார்.
No comments