திருகோணமலை ஆர்.கே.எம்.ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரியுடனான கன்னி சொற்சமரில் சாதித்தது மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா
(அஸ்ஹர் இப்றாஹிம்)
திருகோணமலை ஆர்.கே.எம்.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கும் மட்டக்களப்பு ,கல்லடி சிவானந்தா தேசிய கல்லூரிக்கும் இடையில் திருகோணமலையில் இடம்பெற்ற சொற்சமர் போட்டியில் தற்போதய கையடக்க தொலைபேசி பாவனை மாணவர்களுக்கு நன்மை பயக்கும் எனும் மகுடத்தில் வாதிட்ட மட்டக்களப்பு ,கல்லடி சிவானந்தா தேசிய கல்லூரி மாணவர் அணி வெற்றி பெற்று முதலாவது வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டது.
ஒவ்வொரு வருடமும் நடைபெறவுள்ள இந்த சொற்சமர் நிகழ்வில் தொடர்ச்சியாக மூன்று முறை தொடர்ச்சியாக வெற்றிபெறும் கல்லூரிக்கு இந்த சவால் கிண்ணம் சொந்தமாகும்.
இந்நிகழ்வில் வெற்றியீட்டிய சிவானந்தா அணிக்கு திருகோணமலை ஆர்.கே.எம்.ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி அதிபர் எஸ்.கணேசலிங்கம் மற்றும் மட்டக்களப்பு ,கல்லடி சிவானந்தா தேசிய கல்லூரி அதிபர் எஸ்.தயாபரன் ஆகியோர் இணைந்து இந்த கிண்ணத்தினை வழங்கி வைத்தனர்.
சொற்சமர் போட்டியில் மட்டு சிவானந்தா தேசிய கல்லூரி மாணவர்களான ஏகலைவன் அட்சரன், பிறேமகுமார் அகிலேஸ்,
மதியழகன் சதுசன் மற்றும் ஜோஜ்குமார் யோவு ஆகியோர் மிகத்திறமையாக வாதத்திறமைகளை வெளிக்காட்டி இவ்வருடத்துக்கான வெற்றியை தமதாக்கிக் கொண்டனர்.
திருமதி கஜேந்தினி பத்மநாதன் சேவியரின் நெறியாள்கையில் இம் மாணவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments