Vettri

Breaking News

திருகோணமலை மாவட்ட வருடாந்த சாரணர் பாசறை!!







(அஸ்ஹர் இப்றாஹிம்)

பாடசாலை மாணவர்களிடையே  தியாகம்,அர்ப்பணிப்பு, தலைமைத்துவம்,முதியோரை மதித்தல், முன் ஆயத்தம் ,சூயமாக இயங்கும் தன்மை, ஏனைய மதத்தினரின் கலை கலாச்சார விழிமியங்களுக்கு மதிப்பளித்தல்  போன்ற பண்புகளை வளர்க்கும் நோக்கில் திருகோணமலை மாவட்ட சாரணர் சம்மேளனம் ஒழுங்குசெய்திருந்த திருகோணமலை மாவட்ட இருபாலான பல்லின பாடசாலை மாணவர்கள் பங்கேற்ற வருடாந்த மாவட்ட சாரணர் பாசறை திருகோணமலை  கிண்ணியா, சூரங்கல் அல் அமீன் மகா  வித்தியாலயத்தில் இம்மாதம் 13முதல் 15 ஆம் திகதி வரை மூன்று தினங்கள் இடம்பெற்றது.


இப் பாசறையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள பாடசாலைகளைச் சேர்ந்த சாரணர் மாணவர்கள்,சாரண பொறுப்பாசிரியர்கள், பாடசாலை அதிபர்கள் ,கல்வித் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

பாசறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்ப்பட்டதுடன், கலை கலாச்சார நிகழ்வுகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் பாராட்டியும் கெளரவிக்கப்பட்டனர்.

No comments