பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு போட்டியிட தீர்மானம்!!!
பாறுக் ஷிஹான்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு போட்டியிடுவதற்கான களநிலவரங்களை ஆராய்வதற்காக கூட்டமைப்பின் உயர்பீட கூட்டம் இன்று(29) இரவு கொழும்பில் தனியார் விடுதியில் நடைபெற்றது.
மேலும் கட்சியின் தலைமைத்துவ சபை உயர்பீட உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடும் தீர்மானத்தினை ஏகமனதாக நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.
No comments