தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெற்ற அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி!!
(அஸ்ஹர் இப்றாஹிம்)
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தால் மாணவர்களிடையே அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட போட்டியில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி நான்கு போட்டிகளில் தேசிய மட்டத்தில் முதலாமிடத்தை பெற்றமையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு
அக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் மிக விமரிசையாக நடத்தப்பட்ட மேற்படி நிகழ்வு அக்கரைப்பற்று ஹல்லாஜ் மண்டபத்தில் பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி டாக்டர் கே.சமீம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.சம்சுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கொழும்பு சாஹிரா கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில் ரக்சூர் ரபான், கஸீதா, அரபு எழுத்தணிக்கலை, அரபுத்தமிழ் இலக்கியம் ஆகிய போட்டிகளில் இக்கல்லூரி மாணவர்கள் முதலாமிடத்தை பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் பங்கு கொண்ட மாணவர்கள், அவர்களை பயிற்றுவித்த வளவாளர்கள், உதவிகள் வழங்கிய ஆசிரியர்கள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
No comments