பொதுத் தேர்தலுக்கான ஆவணங்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்!!
பாராளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் அச்சிடும் பணி தொடங்கியுள்ளதாக அரச அச்சகர் கங்காணி கல்பனா லியனகே தெரிவித்தார்.
பாராளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான போதிய ஆவணங்கள் அரசாங்க அச்சகத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான அறிவிப்புகள், வர்த்தமானி அறிவித்தல் போன்றவற்றை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 25 மாவட்டங்களில் வேட்பு மனுக்கள் ஏற்கப்படுவதால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 25 வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட உள்ளன
No comments