கால்பந்தாட்ட நடுவராக தரம் உயர்வு பெற்ற ஜப்ரான் பாராட்டி கெளரவிப்பு
ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் AFC Elite Panel நடுவராக தரம் உயர்வு பெற்று நடுவராக கடமையாற்றிய ஏ. எம். ஜப்ரான் அவர்களுக்கு மயோன் கல்வித்திட்டம் மற்றும் சமூக அமைப்பினால் கௌரவிப்பு
(அஸ்ஹர் இப்றாஹிம்)
ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் மேற்கொள்ளப்பட்ட AFC Referee Academy குழாமில் 2018 ஆம் ஆண்டிலிருந்து 4 ஆண்டுக்கான தொடர் பயிற்சியினை மலேசியாவில் பூர்த்தி செய்ததோடு AFC - Referee Academy இனால் நடாத்தப்பட்ட சுற்றுப்போட்டியில் சிறப்பாக நடுவகம் வகித்ததால் Asian Elite Panel நடுவராக தரம் உயர்த்தப்பட்டு சில நாட்களுக்கு முன் கால்பந்தாட்ட இறுதிப் போட்டியிலும் நடுவராக கடமையாற்றிய கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் மயோன்கல்வித்சிட்டம். எம். ஜப்ரான் அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் மயோன் கல்வித் திட்டம் சமூக அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபா ஜப்ரானின் வீட்டுக்கு சென்று அவரை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பிரதிச் செயலாளர் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சகோதரர் எம்.ஐ.எம். மனாப் அவர்களும் சகோதரர் ஜப்ரான் அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
No comments