ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணை முன்னெடுப்பு
பாறுக் ஷிஹான்
ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை(27) மாலை இரகசிய தகவல் ஒன்றினை தொடர்ந்து வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக நபர் மற்றும் சான்றுப்பொருட்களை மீட்டு இறக்காமம் பொலிஸாரிடம் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்தனர்.
இவ்வாறு கைதானவர் வரப்பத்தான்சேனை 02 வண்டிக்காரன் வீதி பகுதியை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தை என்பதுடன் 43 வயது மதிக்கத்தக்கவராவார். 5 கிராம் 650 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் சந்தேக நபர் வசம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் போதைப்பொருள் நுகர்தல் மற்றும் விற்பனையில் பல நாட்களாக ஈடுபட்டவர் என விசாரணையில் இருந்து தெரியவந்தள்ளது.
மேலும் இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி குணசிறியின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான சம்பத் குமாரஇஅசித ரணசூரிய ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments