Vettri

Breaking News

மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கான விசேட செயற்திட்டம்!!






செ.துஜியந்தன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கான செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.அடுத்து வரும் வருடங்களில்,

மட்டக்களப்பில் புற்று நோய்க்கான விசேட சிகிச்சை மையம் ஒன்றை நிறுவது, பயிற்சியளிக்கப்பட்ட சுகாதார சேவை பணியாளர்கள் குழுமம் ஒன்றை உருவாக்கி, நோய்த்தடுப்பு, பராமரிப்பு மற்றும் நோய்பற்றிய விழிப்புணர்வு  போன்றவற்றை மக்களின் காலடிகளுக்கு கொண்டு செல்வது, அறக்கட்டளைகளை ஒருங்கிணைத்து  அவற்றின் மூலமான உதவிகளை பயன்மிக்கதாக்குவது என்பவை உட்பட குறுங்காலத்தில் ஆற்றப்பட வேண்டிய அவசர  சேவைகளை பலவற்றை உள்ளடக்கியதாக  இவ் செயற்திட்டத்திற்கான ஆதரவை அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயற்பட அழைக்கின்றோமென, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார்.

 

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புற்றுநோய்த்தடுப்பு முன்மொழிவுகளுக்கான ஆலோசனைக் கூட்டமென்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில்  மட்டக்களப்பு பிராந்தியப் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர். ஆர். முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.



இங்கு மட்டக்களப்பு பிராந்தியப் சுகாதார பணிமனையானது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம் ஆகியவற்றியுடன் இணைந்து புற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகைளுக்கான விசேட செயற்திட்டம் ஒன்றை ஒருங்கிணைப்பதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது.


மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன்  ஆலோசைனைக்கு அமைவான இவ் முன்னெடுப்புக்களினை தொற்றா நோய்ப்பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர். இ. உதயகுமார் மேற்கொண்டு வருகின்றார்.

இதில் யாழ் மருத்துவபீட வெளிநாட்டு பழைய மாணவர் சங்கத்தின்  பிரதிப் பணிப்பாளர், டாக்டர் வீ. நவநீதன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்  பிரதிப் பணிப்பாளர் கே. மோகனகாந்தன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ரீ.சதானந்தன்,  புற்றுநோயியல் நிபுணர் டாக்டர். ஏ . இக்பால், புற்றுநோயியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர். பீ . திலகரட்ண

விபுலானந்தா இசை நடனக்கல்லாரி பணிப்பாளர், திருமதி பாரதி கெனடி

புற்றுநோய் தடுப்பு சமூக நிறுவனத் தலைவர் டாக்டர். இ .சிறிநாத்

கிழக்கு புற்றுநோய்ப் பராமரிப்பு ஹாஸ்பிஸ் அமைப்பின் முகாமையாளர் யு. நுஹூலாப்  உள்ளிட்ட பணிமனையின் அதிகாரிகள் மற்றும் ஏனைய நிறுவன அதிகாரிகள் எனப்  பலர் கலந்து கொண்டிருந்தனர்.

No comments