இன்றைய வானிலை!!
மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழைப் பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது
No comments