Vettri

Breaking News

நிந்தவூர் கடற்கரை பிரதேசத்தில் தினசரி சேரும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு






(அஸ்ஹர் இப்றாஹிம்)

நிந்தவூர் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் தினசரி குவியும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுவதாக தினசரி கடற்கரை பிரதேசத்திற்கு பொழுதை கழிப்பதற்காக செல்வோர் விஷனம் தெரிவிக்கின்றார். 




நிந்தவூர் பிரதேச சபையினால் கடற்கரைப் பிரதேசத்தில் பொதுமக்கள் பொழுதை கழிப்பதற்காக கொங்ரீட் கதிரைகள் போடப்பட்டுள்ளன.இவற்றை இனந்தெரியாதோர் உடைத்து சேதப்படுத்தியும் உள்ளனர்.

கடற்றொழிலில் ஈடுபடுவோர் குப்பை கூளங்களில் இருந்து வரும் துர்நாற்றத்தால் தமது தொழிலை நிம்மதியாக செய்ய முடியாமல் உள்ளதாகவும்,குவியும் குப்பைகளில் விலங்கு கழிவுகளும் அடங்கியிருப்பதால் கட்டாக்காலி மாடுகள்,ஆடுகள், பூனைகள் மற்றும் காகங்கள் இவற்றை கிளறி பல பக்கங்களுக்கும் பரப்புவதால் இப் பிரதேசத்தில் பகலிலும் இரவிலும் துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். 

வெளியிடங்களிலிருந்து கடற்கரை வீதியால் பயணிக்கும் சிலர் வீட்டுக்கழிவுகளை இரவு வேளைகளில் கடற்கரையோரங்களில் வீசி விட்டு செல்வதாகவும் பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர்.

No comments