ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரித்து அம்பாறை உகன பிதேசத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்
(அஸ்ஹர் இப்றாஹிம்)
பெண்கள், இளைஞர்கள், சுய தொழில் முனைவோருக்கு சுபீட்சமான தேர்தல் விஞ்ஞாபனமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளது என முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தரிந்து அவர்களால் உஹன பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்படிருந்த பிரச்சார கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் யூ.கே.ஆதம்லெப்பை அவர்கள் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாரை தொகுதி அமைப்பாளர் அநுர முனசிங்க, உஹன பிரதேச சபை முன்னாள் தவிசாளர் உபுல் பிரியந்த, உஹன பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் புஷ்பகுமார ஆகியோர் இப்பிரச்சார கூட்டத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
No comments