Vettri

Breaking News

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு அதிபராக நியமிக்கப்பட்டு ஓர் ஆண்டு பூர்த்தியினை சிறப்பிக்கும் வகையில் பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் கெளரவிப்பு நிகழ்வு





(அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 17வது அதிபராக இலங்கை கல்வி நிருவாக சேவை தரத்தைச் சேர்ந்த திருமதி ஏ.பி. நஸ்மியா சனூஸ் பதவி ஏற்று ஓர் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கல்வி சமூகத்தால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.

கல்லூரியின் வளர்ச்சியில் ஒரு வருட காலப்பகுதியில் கல்லூரி பெளதீக வளம், கல்வி, ஒழுக்கம், இணைப்பாட விதானம், விளையாட்டு, நிருவாக மற்றும் வாசிகசாலை தரவுகளை கணினிமயப்படுத்தல், விடுதி, பள்ளிவாசல், ஸ்மார்ட் வகுப்பு அறை 
புனர்நிர்மாணம், சேர் ராஸிக் பரீட் மண்டப தளபாட வசதிகள் போன்ற பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளை மிக குறுகிய காலத்தில் நிறைவு செய்யப்பட்டமையினை பாராட்டி பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள், பகுதித்தலைவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர்களின் ஏற்பாட்டில் பாடசாலை சமூகத்தால் வாழ்த்தி கெளரவிக்கப்பட்டார்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 17வது அதிபராக 

இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS) தரத்தைச் சேர்ந்த முதல் பெண்ணாகவும் இக்கல்லூரியின் பழைய மாணவியும் முன்னாள் ஆசிரியையும் உதவி அதிபருமான திருமதி ஏ.பி. நஸ்மியா சனூஸ் கடந்த ஆண்டு 26, ஆகஸ்ட், 2023 தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.




 

No comments