98 சதவீதமான தபால் மூல வாக்களிப்பு!!
ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தபால் திணைக்களத்தின் பணிகள் இறுதிக் கட்டடத்தை அடைந்துள்ளன என பிரதி தபால் மா அதிபர் ராஜித் கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,தற்சமயம் சுமார் 7 லட்சத்துக்கு அதிகமான செலுத்தப்பட்ட தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள் தற்போது தபால் திணைக்களத்துக்குக் கிடைத்துள்ளன.
விநியோகிக்கப்பட்ட வாக்குச்சீட்டு மற்றும் செலுத்தப்பட்டு மீளக் கிடைக்கப்பெற்ற வாக்குச்சீட்டு ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், 98 சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
இந்தநிலையில், செலுத்தப்பட்ட தபால் மூல வாக்குச்சீட்டுக்களை உரிய மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்
No comments