Vettri

Breaking News

களுவாஞ்சிகுடியில் வலையமைப்பு தொழில்நுட்பம் (6G ) மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) சம்பந்தமான கருத்தரங்கு




 

(அஸ்ஹர்  இப்றாஹிம்)


அமெரிக்கா இன்ரல் நிறுவனத்தில் சிரேஷ்ட ஆராய்ச்சி விஞ்ஞானியாக கடமையாற்றும் இரத்னேஸ்வரன் வன்னிதம்பி  அவர்கள்  பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம்(தேசிய பாடசாலை -) களுவாஞ்சிகுடிக்கு வருகை தந்து  கல்லூரி  மாணவர்களுக்கு (6G & AI)  விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றை கடந்த செவ்வாய்க் கிழமை (3) நடத்தியிருந்தார்.



பாடசாலையின் முதல்வர் எம். சபேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பங்குபற்றிய மாணர்வர்கள், வலையமைப்பு (1G - 6G) தொழினுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறி (AI) தொழினுட்பம் பற்றியும் பல்வேறு விடயங்களை மிகுந்த ஆர்வத்துடன் அறிந்து கொண்டனர். 

அத்துடன் குறித்த துறைகளில் வினாக்களைக் கேட்ட மாணவர்களுக்கு விஞ்ஞானியினால் ஊக்குவிப்பு  பரிசில்கள் வழங்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.

No comments