Vettri

Breaking News

60 வயது நபரினால் 8 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்- சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் சம்பவம்!!





பாறுக் ஷிஹான்


வீடுகளுக்கு சென்று குர்ஆன் ஓதுவிக்கும்  நபரினால்  சிறுமி பாலியல் சேட்டைக்கு முகம் கொடுத்த சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

26.09.2024 அன்று குறித்த சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 60 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து தடுப்பு காவலில்  வைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு இன்று(29) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய   சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்  வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ்  குழுவினர்  விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு  சந்தேக நபரை இன்று  கைது செய்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் குறித்த சிறுமியின்  குதவழியுடாக தனது கைவிரலை பயன்படுத்தி பாலியல் துஸ்பிரயோகம்  செய்திருப்பதாகவும் இதனால் இரத்தம் வெளியேறியுள்ளதாகவும்  பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

No comments