தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று!!
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15) நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள 2,849 பரீட்சை நிலையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பரீட்சை நடைபெறவுள்ளது.
முதல் தாள் காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.45 மணிக்கு முடிவடைவதுடன் இரண்டாம் தாள் 11.15 மணிக்கு தொடங்கி மதியம் 12.15 மணிக்கு முடிவடையும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments