Vettri

Breaking News

36வருட கல்விச்சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஊடகவியாலாளர் வி. ரி. சகாதேவராஜா!!




36 வருடங்கள் சிறப்பான முறையில் கல்விச்சேவை செய்து   இன்று ஓய்வு பெறுகிறார் மூத்த ஊடகவியலாளர் விபுலமணி வி. ரி. சகாதேவராஜா.

சம்மாந்துறை கல்வி வலயத்தில் மிக நீண்ட காலம் 26 வருடங்கள் உதவிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றி இன்று ஓய்வு பெறும் வி. ரி. சகாதேவராஜா அவர்கள்  அவரின் சொந்த ஊரான காரைதீவில்       காரைதீவு நிருபர் எனும்  ஊடக நாமத்துட தனது சேவையை தொடர்கிறார்.
பேராதனை பல்கலைக்கழக கலைத்துறை பட்டதாரியான  இவர் இலங்கை அதிபர் சேவையில் முதலாம் தர அதிபராவார். விபுலாநந்த அடிகலாறின் தீவிர பக்தராவார்.

கல்வியாளராக, ஊடகவியலாளராக, இலக்கியவியலாளராக,ஆன்மீகவியலாராக,நிகழ்ச்சித் தொகுப்பாளராக, சமூக சேவையாளராக பல துறை ஆளுமையாக அனைவராலும் அறியப்பட்டவர்  அந்த வகையில் தங்களது வெற்றி நியூஸ் ஊடகத்திற்கு எந்தவொரு எதிர்பார்ப்புகளுமின்றி ஊடக சேவையைவழங்கிய ஐயாவிற்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

No comments