Vettri

Breaking News

சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் 17 ஆவது அதிபர் எம்.ஐ.எம். சைபுத்தீன் அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு.






(அஸ்ஹர் இப்றாஹிம்)

சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் 17 ஆவது அதிபர் எம்.ஐ.எம். சைபுத்தீன் அவர்களின் பிரியாவிடை நிகழ்வு பாடசாலை அதிபர் ரீ.கே.எம்.சிராஜ்  தலைமையில் கடந்த திங்கட் கிழமை (1) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

பாடசாலை கல்வி சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில்  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாகவும், கல்முனை வலய கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் , பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம். எச். றியாஷா , சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அஸ்மா அப்துல்  மலீக் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும்  கலந்து கொண்டிருந்தனர். 

இந் நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பாடசாலை அபிவிருத்தி சபை பிரதிநிதிகள்,பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

அத்துடன் பாடசாலை ஆசிரியை திருமதி சியாமா தாலிப் அவர்களின் அனுசரணையில் பாடசாலை நலன்புரிச் சங்கத்தினால் முன்னாள் அதிபரின் சேவையை உள்ளடக்கிய “தடம்” சஞ்சிகை இந்நிகழ்வில் வெளியீட்டு வைக்கப்பட்டது. 








No comments