Vettri

Breaking News

இராமநாதன் அர்ச்சுனா ஒக்டோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில்!!!




 சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை  ஒக்டோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம்  வியாழக்கிழமை (26) உத்தரவிட்டுள்ளது.


வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு செய்தமை முதலான குற்றச்சாட்டுகளுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட வழக்குகள்  சாவகச்சேரி நீதிமன்றில் நீதவான் அ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்பின்னரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வைத்தியர் அர்ச்சுனா சுமத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்க தவறியமை, பிணை நிபந்தனைகளை மீறி செயற்பட்டமை காரணமாக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் பிணை இரத்து செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேவேளை கடந்த தவணையில், வைத்தியர்களின் பிணையாளிகள் மன்றில் முன்னிலையாகி, தம்மை பிணையாளிகளிலிருந்து விடுவிக்குமாறு கோரியமை குறிப்பிடத்தக்கது.

No comments