Vettri

Breaking News

மன்னார் மருதமடு ஆவணி பெருவிழா





(செய்தியாளர்) 


மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள  வரலாற்று சிறப்புமிக்க மருதமடு அன்னையின் ஆவணி மாத வருடாந்த பெருவிழா வியாழக் கிழமை (15) காலை  இடம்பெற்றது.


இம்மாதம் 6ந் திகதி (06.08.) மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் இத்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் செய்யப்பட்டது.


இதைத் தொடர்ந்து வழமைபோன்று ஒன்பது நாட்கள் மாலையில் திருச் செபமாலையுடன் வழிபாடுகள் இடம்பெற்றன. ஒன்பதாவது நாள் மாலை நற்கருணை விழா இடம்பெற்றது.


வியாழக்கிழமை (15) பெருவிழா அன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் சிலாபம் மறைமாவட்ட ஆயர் மேதகு டொன் விமலசிறி ஜெயசூரிய ஆண்டகையும் உட்பட கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. 


ஏதிர்பார்த்ததுக்கு அமைவாக நாட்டில் பல பாகங்களிலிருந்தும் பல இலட்சம் பக்தர்கள் அருட்பணியாளர்கள் , துறவியர்கள்  இவ்விழாவில் கலந்து கொண்டு மரியன்னையின் ஆசீரைப் பெற்றுக் கொண்டனர்.


-மன்னார் அரசாங்க அதிபரின் தலைமையில் இரு முறை நடைபெற்ற ஒழுங்கமைப்புத் தொடர்பாக நடைபெற்றக் கூட்டத்தில் திட்டமிடப்பட்டிருந்த வகையில் வருகை தந்திருந்த பக்தர்களுக்கான சகல அத்தியாவசிய ஏற்பாடுகளும் திருப்திகரமாக இடம்பெற்றிருந்தமையும் காணக்கூடிதாக இருந்தது.


திருப்பலி முடிவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தனது மறைமாவட்ட மக்களுக்கு மடுத்திருப்லியில் வருடத்தில் இருமுறை வழங்கும் அப்போஸ்தலிக்க பரிபூரண ஆசீரை கூடியிருந்த மக்கள் யாவருக்கும் திருச்சபையின் தாய் மொழியாம் லத்தீன் மொழியில் வழங்கினார்.


இது புனிதர்களினதும் எப்பொழுதும் கன்னியான கன்னி மரியாளின் பரிந்துரை வேண்டப்பட்டு பாவ மன்னிப்பும் பலன்தரும் வாழ்வும் வேண்டப்பட்ட ஆசீராக இது அமைந்திருந்தது.


இதைத் தொடர்ந்து அன்னையின் திருச்சுரூப பவனி இடம்பெற்றதுடன் திருச்சுரூப ஆசீரை சிலாபம் மறைமாவட்ட ஆயர் மேதகு டொன் விமலசிறி ஜெயசூரிய ஆண்டகை வழங்கினார்.
















 க. டினேஸ்

No comments